குறை கூறிய இயக்குனர்? பார்த்திபன் காலில் விழுந்து கும்பிட்ட கேஎஸ் ரவிக்குமார்!

K. S. Ravikumar R. Parthiban Iravin Nizhal
By Edward Jun 10, 2022 05:52 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தன் வித்தியாசமான படைப்புகளால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விருது வாங்கும் அளவிற்கு படத்தினை இயக்குபவர் இயக்குனர் ஆர் பார்த்திபன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுக்கப்பட்ட படம் ஒத்த செருப்பு.

பல விருது விழாக்களில் தன் படம் பரிந்துரைப்பதில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் படத்தினையும் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ லான்ச்ல் இசையமைத்த ஏ ஆர் ரகுமான், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கே எஸ் ரவிக்குமார் பார்த்திபன் சார் வித்தியாசமான கதையை செய்யக்கூடியவர். பணம், உழைப்பு, கிரியேட்டிவிட்டியை போட்டிருக்கிறார். அதையெல்லாம் தாண்டி மைக்கையும் போட்டு ட்ரெண்ட்டும் ஆகிவிட்டார் என்று காமெடியாக பேசியுள்ளார்.

மேலும் படத்தில் ஒரு காட்சியில் கட் செய்யப்பட்டு இருந்தது போல் தெரிந்தது. படம் பார்த்தவுடன் இதை பார்த்திபனிடம் கூறினேன். பின் மேக்கிங் காட்சியை காண்பித்து மெய்சிளிர்க்க வைத்துவிட்டார்.

உடனே பார்த்திபன் காலில் விழுந்துவிட்டாராம் கே எஸ் ரவிக்குமார். நான் தெனாலி படத்தில் இந்த ஒரே ஷாட்டை எடுக்க முடியாமல் சிரமப்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.