17 வயதில் அவரால் அந்த மாதிரியான கொடுமை! புத்தகமாக வெளியிட்ட பிரபல நடிகை
பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது இன்னும் குறையவில்லை. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பலர் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இது சினிமாத்துறையில் இருக்கும் நட்சத்திரங்களுக்கும் நடந்து வருகிறது.
இதற்காக மீடூ என்ற அமைப்பு ஆரம்பித்ததன் மூலம் சினிமாவில் பணியாற்றும் நடிகைகளும் முதல் சிறு பணியாளர்கள் வரை ஓப்பனாக நடந்த சம்பவங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்படி பாலிவுட்டில் ஒருசில ஹிட் படங்களில் நடித்து பிரபலமான நடிகை குப்ரா சைட் தான் எழுதிய புத்தகத்தில் தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை எழுதியுள்ளார்.
அவரது 17 வயதில் அங்கிள் என்று அழைக்கப்படும் ஒரு நபர் இரண்டரை வருடங்களாக அத்துமீறி நடந்து கொண்டார் என்றும் அம்மா முன்பே எனக்கு முத்தமும் கொடுப்பார் என்றும் எழுதியுள்ளார்.
மேலும் அவருடன் காரில் சென்றபோது முன்புறம் இருந்து என் தொடைமீது தடவி வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். இப்படி பல முறை அவர் என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
அதன்பின் நான் படிப்பு விசயமாக துபாய் சென்றதால் அதிலிருந்து விடுபட்டேன் என்றும் கூறியிருக்கிறார் குப்ரா சைட். இது தற்போது பால்வுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
My friend sent this perfect clipping. Thank You Hussy.
— Kubbra Sait (@KubbraSait) June 5, 2022
This is an excerpt from my penned book Open Book.#KubbraSaitOpenBook
You can pre order your copy. It’s on Amazon. Thank You @HarperCollinsIN @jayapriya88 https://t.co/IIPglpsLL0 pic.twitter.com/2niimNhi5b