ஏமாற்றத்தில் முடிந்த திருமணம்? காதலர் இறந்தபின் கைது செய்யப்பட்ட நடிகை! குணாலின் தற்கொலையின் பின்னணி

kadhalardhinam monal kunalkumarsingh kunal
By Edward Apr 15, 2022 11:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 1999ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் காதலர் தினம். காதல் சம்பந்தப்பட்ட பல படங்கள் இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்தது. ஆனால் காதலர் தினம் படத்தினை போன்று எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் இடம்பெறவில்லை.

அப்படி படத்தின் கதை பாடல் பிரம்மாண்டம் என இயக்குனர் கதிர் செதுக்கியிருப்பார். அதிலும் இப்படத்தின் மிகப்பெரிய ஹிட் ஏ ஆர் ரகுமானி இசை தான். இப்படத்தின் மூலம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகர் குணால் குமார் சிங்.

இப்படத்தினை அடுத்து தமிழில் பார்வை ஒன்றே போதும், புன்னைகை தேசம், எங்கேஎ எனது கவிதை, சூப்பர்டா, தேவதையை கண்டேன், திருடிய இதயத்தை, உணர்ச்சிகள் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் அனுராதா என்ற மும்பை பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் குணாலுக்கு மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சனைகள் சண்டையாக மாறியது.

இதனால் அனுராதா அவரின் வீட்டிற்கே சென்றுவிட்டார். இதன்பின் தனிமையில் இருந்த குணால் நடிகை லவீனாவுடன் வசித்து நிச்சயம் வரை சென்றது. ஆனால் படவாய்ப்பில்லை, முதல் திருமணம் தோல்வி, ரியல் எஸ்டேட் தொழிலிலும் நஷ்டம் என மன அழுத்ததில் இருந்துள்ளார்.

இதனால் தன்னை கட்டுபடுத்தாத அவர் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி தான் காரணம் என்று சந்தேகத்தில் பெயரில் குணால் தற்கொலைக்கு பிறகு நடிகை லவீனாவை கைது செய்து வீசாரித்தனர்.

பின் உடல் பரிசோதனையில் தற்கொலை தான் என்று கூறியதும் நடிகை லவீனா விடுவிக்கப்பட்டார். இவரை போன்று குணாலுடன் ஒருசில படங்களில் நடித்த நடிகை மோனல் கூட தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery