லதாவை ரஜினிக்கு திருமணம் செய்து வைத்தது இந்த நடிகர் தான்.. யார் தெரியுமா

MGR Rajinikanth M G Ramachandran Latha Rajinikanth
By Kathick Aug 03, 2025 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை ஆகஸ்ட் 14ம் தேதி திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த 1981ம் ஆண்டு லதா என்பவரை காதலித்து ரஜினிகாந்த் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.

லதாவை ரஜினிக்கு திருமணம் செய்து வைத்தது இந்த நடிகர் தான்.. யார் தெரியுமா | Rajinikanth Talk About His Marriage And Mgr

ஆனால், முதலில் லதாவை ரஜினிக்கு திருமணம் செய்து தரமாட்டோம் என லதா வீட்டில் கூறியுள்ளனர். ஆனால், இவர்களின் திருமணத்தை நடக்க காரணமாக எம்ஜிஆர் இருந்துள்ளார். இதுகுறித்து மேடை ஒன்றில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

"என்னை பார்த்து திருமணம் எப்போது செய்துகொள்ள போற என எம்ஜிஆர் கேட்டார். இன்னும் பொண்ணு பார்க்கவில்லை என நான் கூறினேன். முதலில் நல்ல குடும்ப பெண்ணா பார்த்து திருமணம் பண்ணிக்கோங்க, முதல என்கிட்டே தான் சொல்லணும், நான் திருமணத்திற்கு வருவேன் என அவர் கூறினார். அதற்கு பின் என் மனைவி லதாவை நான் சந்தித்தேன். லதாவை சந்தித்ததை என் உடன் பிறந்த அண்ணாவுக்கு கூட சொல்லவில்லை, நான் முதலில் சொன்னது எம்ஜிஆர் இடம்தான். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதன்பின், லதா வீட்டில் எனக்கு பொண்ணு தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க.

லதாவை ரஜினிக்கு திருமணம் செய்து வைத்தது இந்த நடிகர் தான்.. யார் தெரியுமா | Rajinikanth Talk About His Marriage And Mgr

சினிமாகாரன் என்கிற காரணத்தினால் பொண்ணு தரவில்லை. ஒரு ஐந்து ஆறு மாதம் கழித்து எம்ஜிஆர் என்னிடம் கேட்டார், திருமணம் என்ன ஆனது என்று. நான் இந்த காரணத்தை கூறினேன். அவரிடம் பேசிய இரண்டாவது நாளே லதா வீட்டில் எனக்கு பொண்ணு தர ஒத்துக்கொண்டார்கள். நான் கேட்டேன் எப்படி என்று, எம்ஜிஆர் அவர்கள்தான் எனக்காக லதா வீட்டில் பேசியுள்ளார். நல்ல பையன், உங்க பொண்ண நல்லா பாத்துப்பான் என அவர் கூறியிருக்கிறார். எனக்கே திருமணம் நடக்கவே எம்ஜிஆர்தான் காரணம். நான் இன்னிக்கி என் வாழ்க்கையில் சொந்தோஷமாக இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு அவர்தான் காரணம்" என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.