ரஜினி யார் என்று எனக்கு தெரியாது, போடா என்றேன்.. நடிகை குஷ்பூ சொன்ன அதிர்ச்சி தகவல்

Rajinikanth Kushboo Actress
By Bhavya Apr 21, 2025 06:30 AM GMT
Report

குஷ்பூ 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. கதாநாயகியாக கலக்கிக்கொண்டிருந்த இவர் தற்போது அரசியல், சீரியல் மற்றும் பட தயாரிப்பிலும் பிஸியாக இருக்கிறார்.

தமிழில் வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார் குஷ்பு.

பீக்கில் இருந்தபோதே இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திடா என இரு மகள்கள் உள்ளனர்.

ரஜினி யார் என்று எனக்கு தெரியாது, போடா என்றேன்.. நடிகை குஷ்பூ சொன்ன அதிர்ச்சி தகவல் | Kushboo About Calling Rajinikanth With Disrespect

அதிர்ச்சி தகவல் 

இந்நிலையில், குஷ்பூ ரஜினிகாந்த் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " நான் ஹிந்தி படங்களில் நடித்து கொண்டிருந்தபோது எனக்கு ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, எனது அப்பா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். எனக்கு அந்த நேரத்தில் தென்னிந்தியாவில் பெரிய நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான் என்று நினைத்திருந்தேன்.

பின், ஒரு நாள் நான் தர்மத்தின் தலைவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வேலை செய்பவர்கள் வாடா போடா என்று பேசி கொண்டிருந்தனர்.

ரஜினி யார் என்று எனக்கு தெரியாது, போடா என்றேன்.. நடிகை குஷ்பூ சொன்ன அதிர்ச்சி தகவல் | Kushboo About Calling Rajinikanth With Disrespect

அந்த நேரத்தில் எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. அதனால் போடா என்றால் அன்பான வார்த்தை என்று புரிந்து கொண்டேன். பின் ஒரு நாள் ஷூட்டிங் முடித்துவிட்டு ரஜினி செல்லும்போது அவரிடம் போடா என்று கூறிவிட்டேன்.

பக்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின் பிரபு தான் என்னிடம் அவ்வாறு சொல்ல கூடாது என்று கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.