முன்னாள் காதலனுடன் பல வருடம் கழித்து நடிக்கும் குஷ்பூ.. காதல் முறிவுக்கு இவர் தான் காரணமா
நடிகை குஷ்பூ
தமிழ் சினிமாவில் 'குரு சிஷியன்' படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் 'சின்னத்தம்பி' படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை குஷ்பூ. இவர் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், இவர் முதன் முதலில் காதலித்தது நடிகர் பிரபுவை தான். ஆம், நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பூ இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சில வருடங்கள் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், இந்த காதலை பிரபுவின் தந்தையும், நடிகருமான சிவாஜி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இருவரும் தங்களது காதலை முறித்துக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
காதல் முறிவுக்கு பின் இணைந்து நடிக்காமல் இருந்த இருவரும், தற்போது மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். ஆம், வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் தளபதி 66 படத்தில் தான், பிரபு மற்றும் குஷ்பூ நடித்து வருகிறார்கள்.