பெற்ற அப்பாவால் பாலியல் சீண்டல்!! பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை குஷ்பு..
Kushboo
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. தற்போது அரசியல், சின்னத்திரை நிகழ்ச்சிகள், படங்களில் குணச்சித்திர ரோல் என்று பிஸியாக இருந்து வருகிறார்.
குண்டாக இருந்த குஷ்பு சமீபகாலமாக உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போட்டோஷூட் பக்கம் சென்றுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன் சிறுவயதில் பாலியல் தொல்லையை சந்தித்துள்ளது பற்றி பகிர்ந்துள்ளார்.
8 வயது இருக்கும் போது என் அப்பா எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் எனது 15 வயதில் தான் அதற்கான தைரியம் வந்து எதிர்த்தேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் இதுகுறித்து என் அம்மாவிடம் கூறினால் நம்பமாட்டார் என்று பயந்தேன். அப்பாவுக்கு எதிராக 16 வயதில் பேசி அதன்பின் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.