பதில் கூற வேண்டிய அவசியமில்லை!! விஜய் - திரிஷா குறித்து நடிகை குஷ்பூ..
விஜய் - திரிஷா
நடிகர் விஜய், சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது நடிகை திரிஷாவுடன் ஒரே நிற ஆடையணிந்து ஜோடியாக வந்த சம்பவம் தான் தற்போது பேசுபொருளாக இருந்து வருகிறது.

அரசியலை தாண்டி நடிகை திரிஷாவுடன் விஜய் வந்த விவகாரம் குறித்து பல பிரபலங்கள் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகை குஷ்பூ, விஜய் - திரிஷா குறித்து முதன்முறையாக பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகை குஷ்பூ
அவர் பேசுகையில், நாம் இருக்கும் காலத்தில் யாராவது ஒரு சின்ன விஷயம் செய்தால் கூட அதை வேறு விஷயத்துக்கு குற்றம் சாட்டி பேசுவதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். விஜய்யும் திரிஷாவும் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள்.

நான் சந்தித்த பெண்களில் மிகவும் மரியாதைக்குரியவரும் மென்மையான மனம் கொண்டவரும் திரிஷா தான். சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து பேசுபவர்களுக்கு திரிஷா பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.