திடீரென உடல் எடையை குறைத்து இப்படி தான் -நடிகை குஷ்பூ சொன்ன ரகசியம்!
தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் குஷ்பூ.
இவர் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.
மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே சமீபத்தில் குஷ்பூ உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடுமளவு அனைவரையும் ஆச்சார்ய படுத்தியிருந்தார்.
இந்நிலையில் உடல் எடையை எப்படி குறைத்தீர்கள் என ரசிகர்கள் பலரும் கேட்டுவந்த நிலையில், அதன் ரகசியத்தை தற்போது கூறியுள்ளார் குஷ்பூ.
அதன்படி, நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் வேகமாக குறைந்துவிடும் என குஷ்பு கூறியுள்ளார்.