குழந்தை பிறந்த பிறகும் கெத்து காட்ட தான் அந்த கிளாமர் பாட்டு!! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்..
கஸ்தூரி சங்கர்
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய நடிகர்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி சங்கர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தமிழ்ப்படம் திரைப்படத்தில் இடம்பெற்ற குத்துவிளக்கு பாடலில் தான் நடித்தது குறித்து ஒருசில விளக்கத்தை பகிர்ந்துள்ளார்.
தன் மகளின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஏழரை ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டிலாகினார். அதன்பின் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தமிழ்ப்படம் வாய்ப்பு வந்ததும் கிளாமர் பாடலில் ஆடினார்.
அவர் அதுபற்றி கூறுகையில், எனக்கு குழந்தை பிறந்தப்பின் என்னால் கவர்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க முடியும் என்பதை நிரூபிக்கவே அந்த பாடலில் நடித்தேன்.
நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டினாலோ, திருமணம் செய்து கொண்டாலோ அவர்களுக்கு கவரிச்சியான கதாபாத்திரங்கள் வாய்ப்புகள் குறையும் என்பது எழுதப்படாத விதி என்பதால் அவர் அப்பாடலில் நடித்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.