Dune பட ஹீரோவை கழட்டிவிட்ட நடிகை!! பார்ட்டியில் கிளாமரில் கைலி ஜென்னர்..
கைலி ஜென்னர்
கிம் கர்தாஷியனையே ஓரங்கட்டி இன்ஸ்டாகிராமில் 392 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள சர்வதேச மாடல் அழகி தான் கைலி ஜென்னர்.
தொலைக்காட்சி நடிகையாக மட்டுமின்றி மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்து, ஆஸ்கர் விருதுகளை அள்ளிய டியூன்(Dune) படத்தின் ஹீரோ டிமோதி சாலமெட் உடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்தார் கைலி ஜென்னர். தற்போது அவரை பிரேக்கப் செய்து கொண்டதாக செய்திகள் பரவியது.

ஜெஃப் பெசோஸின் ஆடம்பரமான பெவர்லி ஹில்ஸ் எஸ்டேட்டில் நடந்த பிரம்மாண்ட விருந்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் டி மோதி சாலெம்ட் எங்கும் காணப்படவில்லை.
படப்பிடிப்பு பணிகள் காரணமாகவே அவர் வரவில்லை என்று கூறப்பட்டாலும் ரசிகர்கள் இதை இவர்களின் உறவில் ஏற்பட்ட சிக்கலாக பார்த்து வருகிறார்கள்.

பார்ட்டி
இதுகுறித்து ஹாலிவுட் மீடியாக்களில், அவர்களின் உறவில் பிரச்சனை உள்ளது, ஆனால் அவர்கள் முழுமையாக பிரிந்துவிடவில்லை, அவர் நிறையப்படங்களில் நடித்து வருகிறார், கைலி அவரைத் துரத்த வேண்டும் என்று கைலிதான் அதிகமாக முயற்சி செய்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் க்ரிஸ் ஜென்னரின் பிறந்தநாள் விருந்து கொண்டாட்டத்தில் வெளியான புகைப்படங்கள், கைலி சாலமெட் இல்லாமல் இருந்தது சில சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் பிரேக்கப் வதந்திகள் காட்டுத்தீப்போல் பரவிவர இன்னொரு பக்கம் அதை பற்றியெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கைலி ஜென்னர் நீச்சல் குளம் அருகே நின்றபடி எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.





