என் சாவுக்கு அவர் தான் காரணம்! நடிகர் அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயற்சித்த இளம்பெண்!

ajith apollo
By Edward Oct 04, 2021 02:05 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித் குமார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படத்தின் மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்த்த வலிமை படம் அடுத்த ஆண்டு 2022 பொங்கள் அன்று வெளியாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக டிரைலரில் அறிவித்திருந்தனர். இதையடுத்து அஜித் தற்போது விடுமுறையை பைக் டைட் மூலம் கழித்து வருகிறார் என புகைப்படங்கள் மூலம் தெரியவருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் சோழிங்க நல்லூர் வீட்டிற்கு முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்தபெண்மணி என் சாவுக்கு அஜித் தான் காரணம் என்றும் அவருடன் நான் பேச வேண்டும் என்று கூறி நடுரோட்டில் மண்ணென்னை ஊற்றிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளார். போலிசார் அப்பெண்ணை சமாதானப்படுத்தி கைது செய்து அஜித் வீட்டின் முன்னிருந்து வெளியேற்றியுள்ளனர்.

அப்பெண் இரு மாதங்களுக்கு முன் அஜித் மற்றும் அவரது மனைவி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற போது வீடியோவை லீக் செய்ததால் அப்பெண்ணை அந்நிறுவனம் வேலையைவிட்டு எடுத்துள்ளனர். இதனால் அப்பெண் மனமுடைந்து இணையங்களுக்கு பேட்டியளித்து குறித்து உண்மைகளை கூறியுள்ளார். தற்போது இதனால் தன் குடும்பம் கஷ்டப்பட்டு வருவதாகவும் அஜித் இதற்கான பதில் அளிக்கவேண்டும் என்றும் போராடியுள்ளாராம்.