ஆணாதிக்கத்தை பொறுத்துக் கொள்ளவே மாட்டேன்!! நடிகை லட்சுமி மஞ்சு காட்டம்..

Marriage Tamil Actress Actress
By Edward Feb 20, 2026 05:30 AM GMT
Report

நடிகை லட்சுமி மஞ்சு

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து ஒருசில தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகை லட்சுமி மஞ்சு. கடல், காற்றின் மொழி, இஞ்சி இடுப்பழகி, பூக்கி போன்ற படங்களில் நடித்துள்ள லட்சுமி மஞ்சு, நிகழ்ச்சி ஒன்றில் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆணாதிக்கத்தை பொறுத்துக் கொள்ளவே மாட்டேன்!! நடிகை லட்சுமி மஞ்சு காட்டம்.. | Lakshmi Manchu Shares On Patriarchy And Marriage

அதில், நான் ஆணாதிக்கத்தை பொறுத்துக் கொள்ளவே மாட்டேன். திருமணம் என்ற அழகிய பந்தத்தில் ஒருவர் சரியில்லை என்றால் அந்த உறவு அர்த்தமாகிவிடும். கணவனின் அடக்குமுறைகளை சகித்து வாழ்வது என்பது அவரவர் விருப்பம். அவர்களிடம் சொல்லிக்கொள்வது ஒன்றுதான், யாரும் நம்மை அடிக்க உரிமை கிடையாது.

சுயமரியாதை நமக்கு முக்கியம். ஒருகாலத்தில் காதலை பெற்றோரிடம் சொல்லவே பயந்தோம். இன்று நான் ஒருவருடன் உறவில் இருக்கிறேன் என்று கூறும் நிலை வந்திருக்கிறது. சோசியல் மீடியாக்கள் நம் மனதை அசைத்து பார்த்துவிட்டன.

ஆணாதிக்கத்தை பொறுத்துக் கொள்ளவே மாட்டேன்!! நடிகை லட்சுமி மஞ்சு காட்டம்.. | Lakshmi Manchu Shares On Patriarchy And Marriage

தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல முயற்சிகளை செய்வார், ஆனால் இன்று ஒரு பெண்ணுக்கு அனுப்ப வேண்டிய எஸ் எம் எஸ்-ஐ பலருக்கும் காப்பி செய்து அனுப்புகிறான். உலகம் நிறைய மாறிவிட்டது. இதுபோன்ற ஆட்களை கண்டறிவது பெண்கிஅளின் பொறுப்புதான் என்று லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.