லட்சுமி மேனன் கடத்தல் வழக்கில் சிக்கியது எப்படி!! விரைவில் கைதாம்?
தமிழில் உருவான கும்கி படத்தில் சிறுவயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து பிரபலமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று நடித்து வந்த லட்சுமி மேனன், இடையில் படவாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.
ஐடி ஊழியரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் கொச்சி மதுபான பாரில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து, ஒரு தரப்பினர் காரில் ஏறி சென்றுள்ளனர்.
நடிகையையும் அவரது நண்பர்களை ஐடி ஊழியர் எதிர்த்து நின்றதால் பார் மூடும் நேரத்தில் அக்கும்பலை கடத்த சென்று தாக்கியுள்ளனர். சாதாரண பிரச்சனை பெரியதாகி ஆட்கடத்தில் வரை சென்றுள்ளது. இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், உடனிருந்த லட்சுமி மேனனை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர் போலிசார்.
விரைவில் கைதா
இந்நிலையில், யார் மீது தவறு என்று பார் ஊழியர்களை தனித்தனியாக அழைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தும் வருகிறார்கள்.
நண்பர்களை கைது செய்ததும் நடிகை லட்சுமி மேனன் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். ஐடி ஊழியர்களை தாக்கும் போது லட்சுமி மேனனும் உடன் இருந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.