நடிகை லட்சுமியின் இரண்டாம் மகளா இது!! வைரலாகும் நடிகை ஐஸ்வர்யாவுடன் கூடப் பிறக்காத சகோதரியின் புகைப்படம்.
தென்னிந்திய சினிமாவில் 60களில் இருந்து ஆரம்பித்து 90கள் வரை கொடிக்கட்டி பறந்த நடிகை நடிகை லட்சுமி. ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
லட்சுமி 1969ல் பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்து 6 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக 1974ல் விவாகரத்து பெற்றார். அதன்பின் 1975ல் மோகன் சர்மா என்பவரை அடுத்த வருடத்திலேயே திருமணம் செய்தார்.
அவருடன் 5 வருட வாழ்க்கைக்கு பின் 1980ல் அவரையும் பிரிந்தார்.. அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து 1987ல் சிவசந்திரன் என்பவரை திருமணம் செய்து தற்போது வாழ்ந்து வருகிறார்.
லட்சுமிக்கும் முதல் கணவர் பாஸ்கரனுக்கு பிறந்த பெண் தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர். அதன்பின் சிவசந்திரனுக்கும் லட்சுமிக்கும் சிவசந்திரன் சம்யுக்தா என்ற மகள் இருக்கிறார்.
பெரும்பாலும் லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா தான் என்றூ பலருக்கு தெரியும். தற்போது நடிகை லட்சுமியின் இரண்டாம் மகள் சிவசந்திரன் சம்யுக்தாவின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. புகைப்பட கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார் சம்யுக்தா.
