600 கோடி வசூல் பாத்துட்டு லோகேஷ் தலையில் துண்டை போட்ட லலித்!! கண்டுகொள்ளாத தளபதி..
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது லியோ படம்.
ஆனால் லியோ மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் தற்போது வரை வெளியாகி கிட்டத்தட்ட 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வந்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்பாக ஒரு செய்தி இணையத்தில் பரவி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. படத்தில் வேலை செய்த விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சத் தத் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளுக்கு தயாரிப்பாளர் லலித் சம்பளத்தொகையை கொடுத்துள்ளார்.
ஆனால் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை மட்டும் டீலில் விட்டுவிட்டாராம் லலித்குமார். அதாவது, லோகேஷ் கனகராஜ் லியோ படத்தினை முடித்துவிட்டு அவருக்கு சேர வேண்டிய சம்பளத்தில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறார் லலித் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது லோகேஷ் கனகராஜ் தரப்பில் இருந்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.