மகள் ஐஸ்வர்யாவை நம்பி ஏமாந்து போனாரா ரஜினிகாந்த்!! லால்சலாம்-ஆல் கடுப்பான சூப்பர் ஸ்டார்...
ஜெயிலர் படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தனுஷை பிரிந்த பின் சினிமாவில் கவனம் செலுத்த மீண்டும் இயக்கத்தினை ஆரம்பித்தார் ஐஸ்வர்யா.
படத்தின் ஷூட்டிங் முடிந்து வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டது. தற்போது லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல் வந்திருக்கிறதாம். இரு பாடல்களை சேர்க்கலாம் என்ற ஐடியாவில் இருந்திருக்கிறார் ஐஸ்வர்யா.
அதற்கான இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். கண்டிப்பாக பாடல்கள் வேண்டும் என்று ஐஸ்வர்யா ஒரு முடிவில் இருக்க மற்றொரு பக்கம் வேறு பிரச்சனை வந்திருக்கிறதாம்.
ரஜினிகாந்த் நடித்த சில ஃபூட்டேஜ்கள் அழிந்துவிட்டதாகவும் அதை ரீகவர் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான ஐஸ்வர்யா வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைக்க முடிவெடுத்துள்ளார்களாம். இப்படி ஒரு பிரச்சனையில் இருக்க ரஜினிகாந்த் மகள் மீது கோபத்தில் இருக்கிறாராம்.