பாடிபில்டர் டூ நடிகர்!! மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..
மறைந்த நடிகர் ரோபோ ஷங்கர்
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். நிறைய ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது திறமையை வெளிக்காட்டியவர் அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தார்.
கடந்த சில வருடங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் உடல்நிலை சரியாகி படங்கள் நடிக்க தொடங்கியிருந்தார். திடிரென மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேற்று இரவு உயிரிழந்தார்.
பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். ரோபோ ஷங்கர் - பிரியங்கா தம்பதிக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார்.
சொத்து மதிப்பு
சமீபத்தில், இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்து, சில நாட்களில் காதணி விழா நடத்தவும் திட்டமிட்டிருந்தார் ரோபோ ஷங்கர். கடந்த ஆண்டு தன் மகளுக்கு பிரமாண்டமான முறையில் திருமணத்தை நடத்தி முடித்தார்.
முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரோபோ ஷங்கருக்கு 5 முதல் 6 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னை வளசரவாக்கத்தில் சொந்த வீடு, தனிப்பட்ட கார்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்திருக்கிறார் ரோபோ ஷங்கர்.