மறைந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ்!! இன்றுவரை நின்று பேசும் அவரின் 5 கேரக்டர்கள்..
Actors
Death
Tamil Actors
Kota Srinivasa Rao
By Edward
மறைந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ்
தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். வயது முதர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று காலை மரணமடைந்தது தென்னிந்திய சினிமாத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1975ல் ஆந்திர சினிமாவில் தன் பயணத்தை ஆரம்பித்த சீனிவாச ராவ், 2000 காலக்கட்டத்தில் தான் தமிழில் அறிமுகமாகினார். கிட்டத்தட்ட 25 தமிழ் படங்களில் நடித்த கோட்டா சீனிவாச ராவ், நடித்து இன்று வரை பேசும் கேரக்டர் என்ன என்ன என்று பார்ப்போம்...
5 கேரக்டர்கள்
- திருப்பாச்சி படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ், சனியன் சகடை என்ற ரோலில் நடித்தார். இன்றுவரை சனியன் சகடை ரோல் பலராலும் பேசப்படும் கேரக்டரில் ஒன்று.
- விக்ரம் நடித்த சாமி படத்தில் பெருமாள் பிச்சை என்ற கேரக்டரில் நடித்த சீனிவாச ராவ், தன்னுடைய வில்லத்தனத்தால் பலரது கவனத்தை இன்று வரை கவர்ந்து வருகிறது.
- ஜீவா, அஜ்மல் நடித்த கோ படத்தில் ஆளவந்தான் என்ற வில்லன் ரோலில் நடித்திருப்பார். ஒரு கட்சியின் தலைவராக, ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவராக நடித்திருப்பார்.
- கார்த்தி, சந்தானம் நடித்து மிகப்பெரிய ஹிட்டான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். முரட்டுத்தனமான வில்லனாக நடித்து வந்தவர், கரீனா சோப்ரா மீது மயங்கும் சொக்கநாதன் ரோலில் நடித்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
- நடிகர் கரண் நடித்த கொக்கி படத்தில் உப்பிலியப்பன் என்ற ரோலில் நடித்து சென்னையையே மிரட்டும் வில்லனாக நடித்திருப்பார்.
இப்படியான வில்லன் ரோலில் நடித்து மிகப்பெரிய இடத்தை தென்னிந்திய சினிமாத்துறையில் இடம் பிடித்த கோட்டா சீனிவாச ராவ், மரணித்தத்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.