சீக்கிரமே சமந்தா-நயன்தாரா ரிட்டயர்ட் ஆகிடுவாங்க! வேற எந்த நடிகைகளும் இல்லையா?
சினிமாவை பொருத்தவரை நடிகைகளின் மார்க்கெட் இருக்கும் வரை தான் அவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும். அப்படி வராத நிலைக்கும் தள்ளப்படும் நடிகைகள் ரிட்டயர்ட் ஆகி சினிமாவில் இருந்து தூக்கி வீசபட்டோ இல்லை சின்னத்திரைக்கோ சென்று விட நேரும்.
சிம்ரன் - ஜோதிகா:-
அப்படி 90களில் நடிகை சிம்ரன் மற்ர்றும் ஜோதிகா கொடிக்கட்டி பறந்த நடிகைகளாகினர். இருவருக்கும் திருமணமாகியதால் அப்படியே அவர்களின் கேரியரும் மாறியது. அவர்களுக்கு பின் ஆரம்பகட்ட நடிகைகளாக பல இருந்தனர். ஆனால் ஒருசிலருக்கு ஒர்க்கவுட் ஆகியது சிலருக்கு அப்படியே மாறாமலே போனது.
சமந்தா - நயன் தாரா:-
அந்தவகையில் அவர்கள் இருவரின் இடைத்தினை பிடித்தவர்களாக தற்போதைய காலக்கட்டத்தில் இருப்பவர்கள் நடிகை நயன் தாரா மற்றும் சமந்தா.
தமிழ் சினிமாவில் இவர்களுக்கு அடுத்து தான் இரண்டாம் கட்ட நடிகைகள் இன்று இருக்கிறார்கள். தற்போது இருவருக்கும் சுமார் 35 வயதுக்கும் மேல் ஆகிவிட்டது. சமந்தாவும் கல்யாணமாகி விவாகரத்து செய்தவர். அவர் மிஞ்சி போனால் 5 வருடம் தொடரலாம்.
அதன்பின் நயன் தாரா இந்த வருடமே திருமணம் செய்து செட்டிலாகப்போகிறார். ஏற்கனவே அவரது தோற்றம் வயதானது போல் காமிக்கிறது என்று விமர்சனமும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் எழுந்தது.
மற்ற நடிகைகளின் நிலை:-
அதனால் அவர்களின் இடத்தினை பிடிக்க தற்போது 3 நடிகைகள் போட்டி போடுகிறார்களாம். இங்கு டாப் ஆர்டரில் இருக்கும் காஜல் அகர்வால் கர்ப்பமாகி நடிப்பாரா இல்லையா என்ற கேள்வியும், தமன்னா, ரகுல் பிரீத் சிங் அக்கடத்தேசமும் வட இந்திய பக்கமும் சென்று விட்டார்கள். கீர்த்தி சுரேஷும் தங்கை கதாபாத்திரம் அக்கடதேசம் என சுற்றிச்சிற்றி வருகிறார்.
டிரெண்டிங் ஹீரோயின்ஸ்:-
அவர்களுக்கு அடுத்து திறமையாக இருக்கக்கூடிய நடிகை இளம் நடிகைகளே இருக்கிறார்கள். அப்படி இருக்க 3 பேர் நயன் தாரா சமந்தா இடத்தினை பிடிப்பார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். நடிகை பிரியங்கா மோகன், பூஜா ஹெக்டே, ரஷ்மிகா மந்தனா தான் அந்த 3 பேர் கொண்ட நடிகைகள்.
கன்னடத்தில் அறிமுகமாகி சகஜமாக தமிழ் பேசும் நடிகையாகவும் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்றது தான் அதற்கு காரணம்.
அதன்பின் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமாவின் டாப் நடிகையாக இருக்கும் இவர் குறுகிய காலகட்டத்தில் இந்த இடத்தினை பெற்றார். அதனால் தான் தளபதி 66 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
கடைசி அப்ஷனாக இருப்பவர் பூஜா ஹெக்டே. என்னதான் அக்கடதேசத்து நடிகை என்றாலும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு இணையாக பேசப்பட்டார் பூஜா ஹெக்டே. இப்படத்தில் கிடைத்த வரவேற்பை மற்ற தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இவரை கமிட் செய்வார்கள் என்றும் கூறி வருகிறார்கள்.
ஏனென்றால் தமிழ் சினிமாவில் வரும் படங்களில் இவர்களின் கால்ஷீட் தான் பேசு பொருளாக இருக்கிறது.
