லெஜண்ட் சரவணாவின் அடுத்த கெட்டப் இதுதான்.. வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Viral Video Saravanan Arul The Legend
By Edward Aug 12, 2022 08:30 AM GMT
Report

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணா நடிப்பில் சமீபத்தில் தி லெஜண்ட் படம் வெளியாகியது.

முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் வெளியான இப்படம் இதுவரையில் 12.5 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. கலவையான விமர்சனங்கள் நடுவில் நடித்த முதல் படமே இத்தனை கோடி வசூல் செய்துள்ளது.

இவரின் நடிப்பினை பலர் விமர்சித்து வரும் நிலையில் சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் கேலி செய்யப்பட்டும் வருகிறார். அதேசமயம மீம் கிரியேட்டர்கள் அவரை வைத்து கிண்டல் செய்யும் படியான வீடியோ புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வெளிநாட்டு நபர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்து அடுத்த லெஜண்ட் படத்தின் கெட்டப் இதுதான் என்று கூறி வைரலாக்கியும் வருகிறார்கள்.