லெஜண்ட் சரவணாவா இது!! ஆளே மாறி எப்படி இருக்காரு பாருங்க..புகைப்படங்கள் இதோ..
லெஜண்ட் சரவணா
சரவணா ஸ்ரோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் லெஜண்ட் சரவணா கடந்த 2022ல் அவரே தயாரித்து நடித்து அறிமுகமாகிய படம் தி லெஜண்ட். பல கோடியில் உருவாகிய இப்படம் மக்கள் மத்தியில் லெஜண்ட் சரவணாவிற்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
சிலர் அவரை விமர்சித்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார் லெஜண்ட் சரவணா. கடந்த ஆண்டு இரண்டாவது படத்தில் கமிட்டாகி, அதற்கான போட்டோஷூட் எடுத்தும் வெளியிட்டார். இப்படத்தில் நடிகர் ஷாம், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டவர்களும் நடித்து வருகிறார்கள்.
மேலும் படத்தின் ஷூட்டிங்கும் தூக்குகுடி பகுதியில் நடைபெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை மையமாக எடுத்து வரும் இப்படம், மும்பை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனராம்.
இந்நிலையில், லெஜண்ட் சரவணா தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் எடுத்த ரீசண்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். நியூ லுக்கில் படத்திற்காக எடுக்கப்பட்ட கேப்ஷன்களுடன் அந்த புகைப்படங்களை பகிர்ந்ததை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை வாரிக்குவித்து வருகிறார்கள்.



