வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குநர்!! நடிகை லேகா வாஷிங்டன்னின் வாக்குமூலம்..

Gossip Today Tamil Actress Actress Ravi Mohan
By Edward Mar 18, 2026 01:00 PM GMT
Report

தாம் தூம் ஜீவா

தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜெண்டில்மேன் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தான் ஜீவா. காதலன், ஆசை, இந்தியன், குஷி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜீவா, 2001ல் 12பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குநர்!! நடிகை லேகா வாஷிங்டன்னின் வாக்குமூலம்.. | Lekha Washington Opens Adjusting In Kollywood

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன் படத்தை இந்தியில் ஜீவா இயக்கினார். ரவி மோகன் நடித்த தாம் தூம் படத்தினை இயக்கியபோது மாரடைப்பால் மரணமடைந்தார் ஜீவா. இப்படம் திரையில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. தற்போது தாம் தூம் படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரீலிஸ் ஆகவுள்ளது.

இப்படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தாம் தூம் படத்தில் நடிகை லேகா வாஷிங்டன் நாயகியாக நடிக்கவிருந்ததாம். ஆனால் இயக்குநர் அவரை படுக்கைக்கு அழைத்ததால் அவர் மறுத்துவிட்டதல் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குநர்!! நடிகை லேகா வாஷிங்டன்னின் வாக்குமூலம்.. | Lekha Washington Opens Adjusting In Kollywood

லேகா வாஷிங்டன்

 லேகா வாஷிங்டன் அளித்த பேட்டியில், ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர் அவர் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார். அவர் என்னை காரில் அழைத்துச்சென்று பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்.

நான் ஒன்றும் தெரியாததுபோல் நடித்து, ஒருவேளை ஒரு நல்ல நடிகர் கிடைக்கலாம் என்றேன். ஆனால் அவர் விடாபிடியாக இருந்தார். இறுதியில் நான் பொறுமையிழந்து, நான் உங்களுடன் உறவுக்கொள்ள போவதில்லை என்று சொல்லிவிட்டேன். அவர் மிகவும் திகைத்துப் போனாலும், என்னை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்தார். எனக்கு அந்த வேடம் கிடைக்கவில்லை.

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குநர்!! நடிகை லேகா வாஷிங்டன்னின் வாக்குமூலம்.. | Lekha Washington Opens Adjusting In Kollywood

ஆனால் அவர் ஆரம்பத்திலேயே அதைக் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பின்போது தொடர்ச்சியான தொல்லைகளை சமாளிக்க வேண்டியதில்லை என்பதால், எனக்கு அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

பின் அவர் அதே படத்தின் கதாநாயகியுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பிற்கு சென்றதாகவும் வயாகராவை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் எனக்கு தெரியவந்தது. அது மிகவும் கச்சிதமாக அமைந்துவிட்டது என்று நான் நினைத்தேன் இதற்கு பேர்தான் கர்மா என்று லேகா வாஷிங்டன் தெரிவித்துள்ளார்.