லியோ சக்சஸ் போலி, வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்

Vijay Leo
By Dhiviyarajan Dec 03, 2023 08:30 AM GMT
Report

லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக திரைக்கு வந்த படம். முதல் நாளே இப்படம் உலகம் முழுவதும் ரூ 140 கோடி வசூல் செய்தது.

லியோ சக்சஸ் போலி, வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர் | Leo Movie Is Flop

உலகம் முழுவதும் இந்த படம் 598 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு பிரமாண்ட சக்சஸ் மீட் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதுக்குறித்து பிரபல தயாரிப்பாளர் ராஜன் ஒரு விழாவில், லியோ சக்சஸ் எல்லாம் போலி என்பது போல் பேசியுள்ளார்.

இது திரையுலகத்தினரிடம் அதிர்ச்சியையும், ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், லியோ படம் தமிழகத்தில் ரூ 100 கோடிக்கு வியாபாரம் செய்ய, 101 கோடி ஷேர் வர, வெறும் ஒரு கோடி தான் லாபம் என்றும் கூறி வருகின்றனர்.