எப்படி இருந்தவங்க இப்போ படத்துக்காக இப்படி மாறியிருக்காங்களே! நடிகைக்கு குவியும் பாராட்டு..

Lijomol Jose Jai Bhim
By Jeeva Nov 02, 2021 08:30 AM GMT
Report

கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் சித்தார்த் ஜிவி.பிரகாஷ் குமார் நடித்து வெளியான படம் சிவப்பு மஞ்சள் பச்சை.

இதில் ஜிவி.பிரகாஷிர்க்கு அக்காவாகவும் சித்தார்த்துக்கு ஜோடியாகவும் ராஜலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் கடவுளின் தேசத்தை சேர்ந்த லிஜோமோல் ஜோஸ்.

இப்பொழுது அவர் சூர்யாவுடன் சேர்ந்து நடித்து நேற்று அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் படம் ஜெய் பீம். இப்படத்தில் இவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் தான் இன்று அனைவராலும் பேசப்படும் கதாபாத்திரமாக மாறி இருக்கிறது.

சிவப்பு மஞ்சல் பச்சை படத்தில் பார்த்த லிஜோமோல் போல் இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் தன் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் இவர். தற்பொழுது லிஜோமோலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது.

 எப்படி இருந்தவங்க இப்போ படத்துக்காக இப்படி மாறியிருக்காங்களே! நடிகைக்கு குவியும் பாராட்டு.. | Lijomol Jose Jai Bhim Transformation