எனக்கு 20 வயசு தான் ஆகுது..அந்த ரோலில் நடிக்க விருப்பம்!! நடிகை ஸ்ரீலா ஓபன் டாக்..
ஸ்ரீலீலா
இந்திய சினிமாவில் இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீலீலா. இவருடைய நடிப்பை தாண்டி நடனந்தை தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். புஷ்பா 2 திரைப்படத்தில் சிறப்பு பாடலுக்கு இவர் நடனமாடியது படுவைரலானது.
அதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த ஜூனியர் திரைப்படத்தில் வைரல் என்ற பாடலுக்கு கிளாமராக நடனமாடியிருந்தார். இதற்காக கடுமையான விமர்சனத்தையும் சந்தித்து வரும் ஸ்ரீலீலா பேட்டியொன்றில் தனக்கு எப்படியாக கதைக்களத்தில் நடிக்க விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
20 வயசு தான் ஆகுது
அவர் கூறியதில், இப்போது நான் 20களில் இருப்பதால் இந்த வயதுக்கு பொருத்தமான கதைகளிலும் காதல் மற்றும் ராம்காம்(RomCom) படங்களிலும் நடிக்கவே விரும்புகிறேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் அதிகரித்து
வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் அத்தகைய
படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை ஸ்ரீலீலா
தெரிவித்துள்ளார்.