அஜித் கொடுத்த மிகப்பெரிய பிளாப்.. இயக்குனரை கண்டபடி திட்டி தியேட்டர் ஓனர்..
தமிழ் சினிமாவில் 2001-ல் மம்முட்டி, முரளி, அப்பாஸ், ரம்பா, தேவயானி, சினேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான படம் ஆனந்தம். இப்படத்தினை இயக்குனர் லிங்குசாமி இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாதவன், மீரா ஜாஸ்மினை வைத்து ரன் என்ற படத்தினையும் இயக்கி அடுத்த மாபெரும் வெற்றியை கொடுத்தார்.
இதன்பின் சண்டைக்கோழி, பையா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தாலும், ஜி, பீமா, வேட்டை, அஞ்சான், சண்டைக்கோழி 2, தி வாரியர் போன்ற தோல்விப்படங்களை இயக்கியும், தயாரித்தும் ஆள் அடையாளமே தெரியாமல் போனார் இயக்குனர் லிங்குசாமி.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அஜித், திரிஷா நடிப்பில், எஸ் எஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவான ஜி படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
ஜி படத்தின் ரிசல்ட்-ஐ பார்க்க தியேட்டர் பக்கம் காலையில் சென்றேன். அப்போது மாயவரத்தில் இருந்து ஒரு தியேட்டர் ஓனர் கால் செய்து, என்னையா படம் எடுக்குறீங்க, உன்னை நம்பி தியேட்டருக்கு வெள்ளை அடுத்து, பிரொஜெக்டரை மாத்தி எல்லாம் உன் படம் என்று வாங்கி வெச்சிருக்கிறேன்.
குப்பையா இருக்கு படம். காசு மட்டும் கேக்குறீங்க இவ்வளவு சம்பளம்-னு, ரெண்டாவது மூணாவது படத்திலேயே ஏறிடுது என்று திட்டினார். அழுதுக்கொண்டே வீட்டுக்கு சென்றேன், கண்ணை கட்டியது போல் இருந்தது.
உடனே ஏதாவது செய்யனும் என்று தோண்றியது, பின் சண்டைக்கோழி படத்தை எடுத்து, அதே வருடத்தில் படம் ரிலிஸ் ஆகி 100 வது நாள் வரை படம் போகுது என்று லிங்குசாமி கூறியிருக்கிறார்.