நடிகை தமன்னா அந்த நடிகரை காதலித்தது உண்மையா!! 14 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் சொன்ன ரகசியம்

Karthi Tamannaah Gossip Today Relationship N. Lingusamy
By Edward Apr 28, 2024 04:30 AM GMT
Edward

Edward

Report

நடிகர் சிவக்குமார் மகன்களாக தமிழ் சினிமாவில் தன் உழைப்பால் முன்னேறியார்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. மகன்கள் எந்தவொரு வதந்திகளிலும் சிக்காமல் பாதுகாத்து வந்த சிவக்குமார் சூர்யா - ஜோதிகா காதல் விசயத்தால் அதிர்ச்சியாகினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பின் இருவருக்கும் வேறு வழியில்லாமல் திருமணம் செய்து வைத்தார். ஒரு மேடையில் நடிகர் சிவக்குமார், சூர்யா தான் காதலித்து திருமணம் செய்து கொண்டான், கார்த்தியையாவது என் சாதியில் கல்யாணம் பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நடிகை தமன்னா அந்த நடிகரை காதலித்தது உண்மையா!! 14 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் சொன்ன ரகசியம் | Lingusamy Openup Karthi Tamannaa Love Relationship

ஆனால் அப்போது பையா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை தமன்னாவை காதலித்து வந்திருக்கிறார். இது சிவக்குமார் காதிற்கு செல்ல உடனே இருவரின் காதலை பிரித்ததோடு பையா படம் வெளியான அடுத்த ஆண்டு 2011ல் சினிமாவை சாராத ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார் சிவக்குமார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து தமன்னாவுடம் சிறுத்தை, தோழா போன்ற படங்களில் ஜோடியாகவும் நடித்தார் நடிகர் கார்த்தி.

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி, கார்த்தி - தமன்னா காதல் ரகசியம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அதில், கார்த்தி அந்தளவிற்கு ஸ்மார்ட் கிடையாது.

நடிகை தமன்னா அந்த நடிகரை காதலித்தது உண்மையா!! 14 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் சொன்ன ரகசியம் | Lingusamy Openup Karthi Tamannaa Love Relationship

அப்பா சிவக்குமார் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் தான் செய்வார் என்றும் சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தெரியாமல் பல விசயங்கள் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், கார்த்தி - தமன்னா இருவரும் காதலிப்பதாக வெளியான வதந்திகளை நான் கேள்விப்பட்டேன், ஆனால் அந்து எந்தளவிற்கு உண்மை என்று இருவருக்கு மட்டும் தான் தெரியும் என்று கூறியிருக்கிறார்.