இந்தியர்களே அனுமதி மறுக்கப்படும் 6 இந்திய இடங்கள்!! தமிழ்நாட்டில் கூடவா?
6 இந்திய இடங்கள்
இந்தியாவில் இந்தியர்களாகிய நாம் எந்த இடத்திற்கும் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டுதான். ஆனால் சில முக்கிய இடங்களுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி பெறவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இப்படியான நம் இந்தியாவிற்குளேயே சில இடங்களுக்கு இந்தியர்களாகிய நாம் செல்ல அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. அவை எந்த இடம் என்னென்ன என்று பார்ப்போம்.

சென்னையிலுள்ள ரெட் லாலிபாப் விடுதிக்கு செல்ல இந்தியர்களுக்கே அனுமதி இல்லையாம். அந்த விடுதியில் வெளிநாட்டினர்களுகு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுவதாகவும் பாஸ்போர்ட் கொடுத்தால் மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடுகலும் உள்ளதாம்.

பல கோடி வெளிநாட்டவர்களை ஈர்க்கும் கோவாவில் சில கடற்கரையில் இந்தியர்களுக்கு செல்ல அனுமதி இல்லையாம். வெளிநாட்டு பயணிகளின் பிரைவஸியை பாதுகாக்க இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.

1800 ரஷ்ய அரசால் கட்டப்பட்ட இடம் தான் ரஷ்ய காலனி. கூடங்குளத்தில் இருக்கும் இந்த காலனிக்கு இந்தியர்கள் செல்ல அனுமதியில்லையாம். ரஷ்ய அரசிடம் அனுமதிபெற்ற சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சென்னையிலுள்ள ப்ரண்ட்ஸ்லேண்ட் ஹோட்டலுக்கு இந்தியர்களுக்கு அனுமதி இல்லையாம். அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டினர்களுக்கு மட்டுமே அனுமதியாம்.

அகமதாபாத்தில் அமைந்துள்ள சகுரா ரியோகான் உணவகத்தில் இந்தியர்களுக்கு அனுமதி கிடையாது. ஜப்பான் வாடிக்கையாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஃப்ரீ கசோல் கஃபே இந்தியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அனுமதி இல்லையாம். இந்த உணவகம் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.