ரீமேக் படத்தால் உச்சத்தை தொட்ட 50 வயதான தளபதி விஜய்!! லிஸ்ட் ஓவரா போகுதே..

Vijay Gossip Today Greatest of All Time
By Edward Jun 22, 2024 04:39 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சமபளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை விஜய். தற்போது கோட் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்றோடு தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கு கோட் படக்குழு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

ரீமேக் படத்தால் உச்சத்தை தொட்ட 50 வயதான தளபதி விஜய்!! லிஸ்ட் ஓவரா போகுதே.. | List Of Remake Movies Acted By Thalapathy Vijay

இந்நிலையில் விஜய் இந்த உச்சக்கட்ட இடத்திற்கு வரக்காரணமாக அமைந்தது ரீமேக் படங்களில் நடித்தது தான். அப்படி விஜய் எக்கச்சக்க ரீமேக் படங்களில் நடித்துள்ள படங்களின் லிஸ்ட்டை தற்போது பார்ப்போம்...


  • 1996ல் விஜய் நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் படம் தெலுங்கில் உருவான பெல்லி சண்டடி படத்தின் ரீமேக் தான்.
  • 1997ல் மலையாளத்தில் இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான அனியாதிபிரபு என்ற படத்தின் ரீமேக்கில் விஜய், ஷாலினி இணைந்து காதலுக்கு மரியாதை படத்தில் நடித்திருந்தார்கள்.
  • நடிகர் விஜய், சிம்ரன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த பிரியமானவளே படம் தெலுங்கில் வெளியான பவித்ர பந்தம் படத்தின் ரீமேக் தான்.
  • நடிகர் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படம் 1999ல் மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் ரீமேக் தானாம்.
  • தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான தம்முடு படத்தை தமிழில் விஜய்யை வைத்து பத்ரி படத்தினை ரீமேக் செய்துள்ளனர்.
  • தெலுங்கில் சிரு நுவ்வுதோ என்ற படத்தினை விஜய்யை வைத்து யூத் படத்தினை ரீமேக் செய்துள்ளார்கள்.

ரீமேக் படத்தால் உச்சத்தை தொட்ட 50 வயதான தளபதி விஜய்!! லிஸ்ட் ஓவரா போகுதே.. | List Of Remake Movies Acted By Thalapathy Vijay

  • மேலும் தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவான நுவ்வு நாக்கு நசாவ் படத்தை தான் விஜய்யை வைத்து வசீகரா படத்தினை ரீமேக் செய்துள்ளனர்.
  • விஜய் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த கில்லி படத்தை மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தை வைத்து ரீமேக் செய்துள்ளனர்.
  • விஜய், திரிஷா இணைந்து நடித்த ஆதி படத்தினை தெலுங்கில் வெளியான அத்தநோக்கடே படத்தின் ரீமேக் தானாம்.
  • மகேஷ் பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை அதே டைட்டிலில் விஜய்யை வைத்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
  • பிரபுதேவா இயக்கத்தில் படுமோசமாக பிளாப்-ஆன விஜய்யின் வில்லு படம் சோல்ஞர் படத்தின் ரீமேக்காம்.
  • விஜய் நடித்த காவலன் படம் மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படத்தை வைத்து ரீமேக் செய்துள்ளார்கள்.
  • தெலுங்கில் வெளியான அசாத் படத்தை தான் விஜய்யின் வேலாயுதம் படத்தினை ரீமேக் செய்திருக்கிறார்கள்.
  • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த விஜய்யின் நண்பன் படம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தானாம்.

இப்படி பல ரீமேக் படங்களில் விஜய் அடுத்தடுத்து நடித்து இந்த உச்சத்தை தொட்டிருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery