சின்ன வயசுல திருமணம் செய்த தமிழ் நடிகைககள்!! இந்த நடிகையும் தான்..
இளம் வயதில் திருமணம்
சினிமாவில் இளம் வயதில் அறிமுகமாகி 40 வயது எட்டும் வரை திருமணம் செய்து கொள்ளாமல் படங்களில் நடித்து வரும் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் ஒருசில நடிகைகள் இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்..

தமிழில் பிரபலமான நடிகை வித்யா பிரதீப், தன்னுடைய 19 வயதில் புகைப்பட கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
டாப் நடிகையாக இருக்கும்போதே தன்னுடைய 21 வயதில் நடிகர் அஜித் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஷாலினி.

டாப் நடிகையாக வளர்ந்து வந்த நடிகை அமலா பால், இயக்குநர் ஏ எல் விஜய்யை தன்னுடைய 22 வயதில் காதலித்து திருமணம் செய்தார். பின் கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பிரிந்துவிட்டார்.
தென்னிந்திய மொழியிலும் பாலிட்டிலும் நடித்து வந்த நடிகை ஜெனிலியா தன்னுடைய 24வது வயதில் நடிகர் ஜித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை நஸ்ரியா, நடிகர் ஃபகத் பாசிலை 19 வயதில் திருமணம் செய்து கொண்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
குட் நைட் படம் மூலம் பிரபலமான நடிகை மீதா குருநாத், தன்னுடைய 25 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சாயிஷா, நடிகர் ஆர்யாவை காதலித்து 21 வயதில் திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்தார்.

மேலும், நடிகை ராதா 20 வயதிலும், நடிகை ஸ்ரீதேவி 21 வயதிலும், நடிகை அம்பிகா 22 வயதிலும், நடிகை ரேவதி 23 வயதிலும் தங்களின் இளம் வயதில் திருமணம் செய்து டாப் நடிகைகளாக வலம் வந்தனர்.