உங்களுக்கு வாயிலதான் கண்டம்? வாயை கொடுத்து மாட்ட இளையராஜாவுக்கு இப்படியொரு பிளானா?

modi ilaiyaraaja isaignani
By Edward Apr 17, 2022 05:30 AM GMT
Report

தமிழக மக்களை சமீபத்தில் எரிச்சலூட்டும் வகையில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் இளையராஜா. இசையின் ஜாம்பவான இருக்கும் இளையராஜா, சமீபத்தில், ப்ளூ கிராஸ் டிஜிட்டல் பவுண்டேஷன் என்ற நிறுவனம் மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் பேசிய இளையராஜா மோடியின் ஆட்சி சிறந்த ஆட்சி, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. மோடி அவர்கள் சமூக நீதி விஷயத்தில் பல நடவடிக்கைகள் எடுத்து உள்ளார்.

குறிப்பாக முத்தலாக் தடை சட்டம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் அம்பேத்கார் அவர்கள் இருந்தால் மோடியைப் பார்த்து பெருமைப்படுவார் என்று கூறியிருந்தார். இதற்கு பல தரப்பினர் மோடியை அம்பேத்கருடன் எப்படி ஓப்புடுவீர்கள் என்று கூறி திட்டி வந்தனர்.

இளையராஜா ஒரு சங்கியாக மாறிக் கொண்டிருக்கிறார்.இவர் இப்படி பேசியதற்கு காரணம் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்காக மோடியைப் புகழ்ந்து வருகிறாரா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

மேலும், இவரது தம்பி கங்கை அமரனும் பாஜகவைச் சேர்ந்தவர். இப்பொழுது இருவரும் ஒன்றாக இருப்பதனால் தம்பியின் மூலம் மோடியை புகழ்ந்து இருக்கலாம் என்ற செய்தியும் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் விருதுகளை தேடி செல்பவர் இளையராஜா அல்ல இளையராஜா தேடி பல விருதுகள் வரும் என்று அவரது ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.