முகேஷ் அம்பானியின் ரூ. 15 ஆயிரம் கோடி ஆண்டிலியா வீடு!! போட்டியாக இறங்கிய பிரமாண்ட கோபுரம்...
ஆண்டிலியா வீடு
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.
ஆண்டிலியா வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீட்டில் பல ஆடம்பர வசதிகள் இருக்கிறது.
மும்பையின் மிக உயரமான கட்டிடம்
மும்பையின் மிக உயரமான கட்டிடமாக ஆண்டிலியா வீடு இருந்து வந்தது. ஆனால் தற்போது லோதா குழுமம் கட்டியிருக்கும் புதிய கோபுரக்கட்டிடம் அந்த பெருமையை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.
லோதா குழுமத்தால் தெற்கு மும்பையின் அல்டாமெளண்ட் சாலையில், கோவாலியா டேங்க்கிற்கு அருகே இந்த லோதா அல்டாமெளண்ட் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது 640 அடி உயரத்துடன், 43 தளங்கள் கொண்டுள்ளது.
லோதா அல்டாமெளண்ட்
இதில் 52 குடியிருப்புகளுடன், ஹாதி தெஹ்ரானியின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆண்டிலியாவின் உயரத்தைவிட அதிகமாம். 5 நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அரபிக் கடலை பார்ப்பது போல குடியிருப்புகள் அமைந்துள்ளதாம்.
இந்த லோதா அல்டாமெளண்ட் கட்டிடம் தான் இந்தியாவிலேயே உயரமான கட்டிடங்களில் 68வது இடத்தை பிடித்திருக்கிறது. லோதா அல்டாமெளண்ட் கட்டம், ஆண்டிலியா மிகவும் பிரபலமான ஆல்டாமெளண்ட் சாலையில் தான் இருக்கிறது.
அம்பானி குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்ர்கள் இந்த இடத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.