போதை கதையை வைத்தே இத்தனை கோடி சொத்துக்களை சேர்த்துவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் தற்போது இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த லியோ படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.
இவர் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் என்றாலே போதைப்பொருள் கதை தான் என்ற பேச்சு இன்றும் உள்ளது, அதை வைத்து தான் அவர் வண்டி ஓடுகின்றது என்று.
தற்போது ரஜினி படம் இதில் எதுவும் இல்லாமல் புதுக்கதையை லோகேஷ் எடுக்கவுள்ளார் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் லோகேஷ் தற்போது ஒரு படத்தில் ரூ 50 கோடி மேல் சம்பளம் வாங்கும் நிலைக்கு வளர்ந்துவிட்டார்.
தற்போது கிடைத்த தகவல்படி இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ 40 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.
கண்டிப்பாக ரஜினி படத்திற்கு பிறகு இது பல மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.