கேஜிஎஃப், பாகுபலி எல்லாம் ஓரம்போங்க! ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்க போகும் கமல்ஹாசன்

Kamal Haasan Suriya Lokesh Kanagaraj Vikram Movie
By Edward May 12, 2022 07:02 AM GMT
Report

தமிழ் சினிமாவின் ஆண்டவர் என்று கூறபடும் நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூ 3 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

பகத் பாசில், விஜய் சேதுபதி, ஷிவானி, நரேன் காளிதாஸ், ஜெயராம், விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வரும் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அனிரூத் இசையில் பத்தல பத்தல பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தில் பல விஷயங்களை மறைத்து பாதுகாப்பாக வைத்துள்ளார்கள் படக்குழு. இந்நிலையில் விக்ரம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கைதி 2 வில் அர்ஜுன் தாஸ் குரூப்பின் தலைவராக சூர்யாவை நடிக்க வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ், கைது 2 வையும் விக்ரம் படத்தையும் மல்டிவெர்ஷனாக எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படியொரு கதையை தமிழ் சினிமாவில் முதன்முதலாக கையில் எடுத்துள்ளார்.

மார்வெல் படத்தில் எப்படி அனைத்து கதாபாத்திரமும் இணைந்து வெளியாகியதோ அப்படியொரு பிளானை போட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.