ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என ஆறு திரைப்படங்களை இயக்கி தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ஆனால், கடைசியாக வெளிவந்த கூலி திரைப்படம் வசூலில் ரூ. 1000 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மாறாக அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் ரஜினி - கமல் இணையும் படத்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கைவசம் இருந்து நழுவியதாக சொல்லப்படுகிறது.

ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த நிலையில், அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் வகையில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களமிறங்கியுள்ள DC படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்தது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் வாமிகா கேபி ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த நிலையில், DC படத்தில் ஹீரோவாக நடிக்க லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக அவர் ரூ. 35 கோடி சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.