வாய்ப்பிளக்க வைக்கும் லோகேஷ் கனகராஜின் உச்சக்கட்ட சம்பளம்!! ரஜினிகாந்த் மார்க்கெட்-ன்னா சும்மாவா!!
தமிழ் சினிமாவில் தற்போது அனைவராலும் வியந்து பார்க்கக்கூடிய இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் ஆரம்பித்த திரைப்பயணம் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற மிகப்பெரிய வசூல் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.
தற்போது விஜய்யின் லியோ படத்தின் வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறார். கைது, விக்ரம் படம் போன்று மிகபெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் லியோ படத்தின் எதிர்ப்பார்ப்பும் லோகேஷ் கனகராஜ் மேல் இருக்கும் நம்பிக்கையால் பல நட்சத்திரங்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் லோகேஷ் கனகராஜை கூப்பிட்டு பேசி ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதனால் பல தயாரிப்பாளர்கள் அதற்காக போட்டிப்போட்டு வருகிறார்களாம்.
ரஜினிகாந்த் படத்திற்காக 35 கோடி அளவிற்கு லோகேஷ் கனகராஜ்க்கு சம்பளமாக பேசப்பட்டு வருகிறதாம். ஆனால் ஒருசில தயாரிப்பாளர்கள் போட்டிப்போட்டு லோகேஷ் கனகராஜின் சம்பளத்தை 60 கோடி அளவிற்கு பேச முன்வந்துள்ளார்களாம்.
பிரம்மாண்ட இயக்குனர்கள், ராஜமவுலி, சங்கர், மணிரத்னம் கூட இப்படியொரு தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டதில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 3 கோடியில் இருந்து 60 கோடி அளவிற்கு மாறியிருப்பது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து வருகிறது.