மாபெரும் வெற்றிக்கு பிறகு கோடியில் சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்.. அடேங்கப்பா

Vijay Lokesh Kanagaraj
By Karthick Raja Jun 15, 2022 02:37 PM GMT
Report

மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின், உலகநாயகனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி, ஹிமாலய வெற்றியை பதித்துள்ளார்.

தொடர்ந்து நான்கு படத்திலும் வெற்றியை பதித்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் தளபதி விஜய்யுடன் தளபதி 67 படத்தில் கைகோர்க்கவுள்ளார் என்று தெரியவந்துள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என அவரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தளபதி 67 படத்தை இயக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே படத்தின் மாபெரும் வெற்றியால் இப்படி சம்பளத்தை உயர்த்திவிட்டாரே என்று பலரும் கூறி வருகிறார்கள்.