ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ்!! அப்படி நடிக்க இதான் காரணம்!! லோகேஷ் கூறிய உண்மை..
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கி மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தினையும் இயக்கவுள்ளார். அடுத்தடுத்த படங்களை வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், தான் இயக்கும் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை வைப்பதில்லை. அதற்கு காரணம் எனக்கு ரொமான்ஸ் பண்ண வராது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசனின் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் இந்த ஆல்பம் உருவாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் இனிமேல் பாடலில் பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதி ஹாசனுடன் பல காட்சிகளில் ரொமான்ஸ் செய்து நடித்திருப்பது தான்.
அப்படி நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன் என்ற பதிலை லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஒருமுறை ராஜ் கமல் நிறுவனத்திடம் இருந்து போன் வந்தது. அப்போது ஸ்ருதி ஹாசன் ஒரு ஆல்பம் உருவாக்கி இருக்கிறார் அதில் நடிக்குமாறு கேட்டார்கள். முதலில் ஓகே சொல்லவில்லை. பின் இவ்வளவு பெரிய நிறுவனம் அதுவும் கமல் ஹாசனின் நிறுவனம் கேட்கும் போது முடியாது என்று கூற முடியாது.
அதன்பின் ஸ்ருதி ஹாசன் ஆல்பம் பற்றி கூறியதாகவும் ஸ்கிரிப்ட் புக் கொடுத்து படித்து விட்டு துவாரக்கை சந்தித்தித்ததாகவும் கூறினார். ஏன் என்னை தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் சூட்டிங்கிற்கு போவதற்கு நான் தைரியமாக இல்லை. யாரி காரித்துப்பாத அளவிற்கு ஏதாவ்து நன் பண்ணி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு இனிமேல் பாடல் இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
