அட போப்பா! என் ரூட்டே வேற நெல்சா? பணம் மட்டும் தான் முக்கிமாக இருக்கும் லோகி..

Lokesh Kanagaraj Nelson Dilipkumar
By Edward Jun 15, 2022 09:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களானாலும் சரி தயாரிப்பாளர்களானாலும் சரி ஒரே படம் வெற்றியை கண்டால் அதை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படி செல்லும். அப்படி சமீபத்திய இயக்குனர்களுக்குள் நடக்கும் சமாதானம் அதிகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்சன் வாங்கும் சம்பளத்தை விட லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் குறைவு என்ற செய்தி தான் தற்போதைய இணையதள டாக். நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தையும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

தளபதி விஜய்யை வைத்து நெல்சனுக்கு தரமான படம் கொடுக்க முடியவில்லை என அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தலைவர் 169 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை இயக்கும் முன்பாகவே பல சிக்கல்களில் மாட்டி உள்ள நெல்சன், இப்படத்திற்காக 20 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

இதற்கு பல டைட்டில் வைத்தும் செட்டாகவில்லை என்று பல புகாரும் வருகிறது. இதேபோல் தான் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விக்ரம் 3 படத்திற்காக 10 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். மேலும் தனக்கு படத்தை இயக்குவது தான் முக்கியம், பணம் முக்கியம் இல்லை என தெரிவித்தார்.

இவருடைய பெருந்தன்மையையை பார்த்த கமலஹாசன் மேலும் 2 கோடி உயர்த்தி 12 கோடியாக சம்பளத்தை கொடுத்துள்ளார். இது இல்லாமல் கமல் ஹாசன், கார் மற்றும் அவருக்கு பேர் கிடைக்க நல்ல விசயங்களை செய்தும் வருகிறார்.

இப்படி ஒரு படம் மார்க்கெட்டை பொருத்து இல்லாமல், கதை அளவில் மக்கள் இடம் நல்ல வரவேற்பு பெற்றாலே போதும் என்ற நிலை தற்போது இளம் இயக்குனர்களிடம் வந்துள்ளது.

300 கோடியோ 200 கோடியோ படத்தின் கதையை பொருத்து தான் வசூல் பெறும் என்பதை லோகேஷ் கனகராஜ் நிரூபித்துள்ளார்.