GVM-க்கு தம் அடிக்க கத்துக்கொடுத்ததே அந்த படத்தை காப்பி அடிச்சி தான்!! இயக்குனர் லோகேஷ்!!
தமிழ் சினிமாவையே இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்து வருபவர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தினை இயக்கி வருகிறார்.
லோகேஷ் சினிமா யூனிவர்ஸ்-ஐ வைத்து மிரள வைத்து வரும் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் லியோ படப்பிடிப்பின் சில நாள் ஒய்வில் நேரலையில் கலந்து கொண்டுள்ளார். பிரபல ஊடகம் நடத்திய பேட்டியொன்றில் விஜே அர்ச்சனா பல கேள்விகளை கேட்டிருக்கிறார்.
அப்படி, பல இயக்குனர்கள் லியோ படத்தில் நடித்து வருகிறார்கள், அவர்களை இயக்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஏற்கனவே இயக்குனர்கள் கோவிட் டைமில் பேசிக்கொண்டிருக்கிறோம்.
படத்தின் ஷூட்டிங்கில் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் நெருக்கமாகி வேலை செய்தோம். மிஸ்கின் சார் மைன்ஸ் டிகிரியில் கேஷ்மீரில் வேலை செய்தார். நடுங்கி இருக்கும் போது பலமுறை சாரி கேட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதேபோல், ஜிவிஎம்-யுடன் வேலை பார்க்கும் போது உங்கள் ஸ்டைலில் பேசுங்கள், ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறினேன்.
மேலும் தம் அடிக்க நானே கற்றுக் கொடுத்திருக்கிறேன். எப்படி இதை கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டதற்கு எல்லாம் உங்க காக்க காக்க படத்தை பார்த்து தான் கத்துக்கொண்டது சார் என்று லோகேஷ் வெளிப்படையாக கூறியுள்ளார்.