67 விஜய்க்கு எழுதப்பட்ட கதை லோகேஷ் இல்லையாம்.. தரமான சம்பவம் கமல் தான் கொடுக்கனும்..
உச்ச நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பி ஆரம்பித்துள்ள நிலையில் தளபதியின் 67வது படத்தினை இயக்குவது யார் என்ற செய்தி வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜுடன் தளபதி விஜய் இணையவுள்ளாராம். இந்நிலையில் தற்போது தலைவர் ரஜினிகாந்துக்கு எழுதப்பட்ட கதையில் தான் விஜய் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அப்போது லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் இயக்கயுள்ளார் என கூறப்பட்டது.
மேலும் இப்படத்தை கமலஹாசன் தயாரிக்கிறார் என்றும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமலும் நடிப்பார் என கூறப்பட்டது. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு கமல், ரஜினி இருவரும் ஒரே திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால் இதற்கான வேலைகளை தொடங்கியபோது ரஜினி இப்படத்தில் நடிக்க விருப்பமில்லை என சொல்லியதாக கூறப்படுகிறது. ஏற்கனெவே விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை கொடுத்த லோகேஷ் ரஜினிக்கு எழுதிய கதையை விஜய்யின் தளபதி 67-ஆக கொடுக்கவுள்ளாராம்.
மேலும், விஜய் படம் என்றாலே கொஞ்சம் மாற்றத்தை இடையில் கூறுவாராம். அப்படி இடையில் மாற்றச்சொல்லி இருந்ததால் தான் லோகேஷின் மாஸ்டர் படம் சில சொதப்பல்களை சந்தித்தது. ரஜினிக்கு எழுதிய கதையிலும் தளபதி பல மாற்றத்தை கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் லோகேஷுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளதாக இயக்குனரே பல பேட்டியில் கூறியிருக்கிறார். இதன்பின் தான் லோகேஷ் கமல் ஹாசனுக்கு கதை எழுதி விக்ரம் படத்தினை முடித்திருக்கிறாராம்.