யாரும் கண்டுக்குறது இல்ல!! வாய்ப்புகாக ஏங்கும் லொள்ளு சபா மனோகர்..
லொள்ளு சபா மனோகர்
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி இன்று வரை ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. தற்போது சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் சந்தானம் முதல் பல நட்சத்திரங்கள் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது லொள்ளு சபா.
இந்நிகழ்ச்சியில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மனிதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் லொள்ளு சபா புகழ் நடிகர் மனோகர். தன்னுடைய உடல் அசைவு, காமெடி திறமை, வசனக்கள் என்று தனித்துவமான பாணியில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார் மனோகர்.
நடிக்க கூப்பிடறது இல்ல
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இப்போ சினிமாவுல காலமே மாறிப்போச்சு, முன்னமாதிரி யாரும் நடிக்க கூப்பிடறது இல்ல. முன்னாடி எல்லாம் டைரக்டர்ஸ், ரைட்டர்ஸ் கூட நல்ல ப்ரண்டா இருந்தோம். ஆனா இப்போ யாரும் கண்டுக்குறது இல்ல. இடையில கொஞ்சம் உடம்பு சரியில்ல.
இப்போ எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கத் தயார் என்று அவர் கூறியிருக்கிறார். ஒரு காலத்தில் தன் நகைச்சுவையான நடிப்பால் பலரையும் சிரிக்க வைத்த மனிதருக்கு இப்படியொரு நிலையா? யாராவது இவருக்கு வாய்ப்பு கொடுங்க என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.