கிண்டலடித்த லொள்ளு சபா டீம்!! நேரில் அழைத்து விஜயகாந்த் செய்த செயல்..
சில பிரபலங்களுக்கு சினிமாவுக்கு பின் சின்னத்திரை ஒரு கனவு தொழிற்சாலையாக இருக்கிறது. எப்படியாவது சின்னத்திரையில் நுழைந்து வென்றுவிட்டால் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், பலர் அதிலிருந்து வந்து வெள்ளித்திரையில் டாப் இடத்தினை பிடிக்கிறார்கள்.

அந்தவரிசையில் இயக்குநர் ராம்பாலாவும் ஒருவர். முதலில் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து பின் சின்னத்திரைக்கு வந்தார். விஜய் தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்தவர் லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கினார். வாரா வாரம் ரிலீஸாகும் படங்களை கலாய்த்து ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது லொள்ளு சபா நிகழ்ச்சி.
ராம்பாலா
இந்நிகழ்ச்சி மூலம் சந்தானம், யோகிபாபு, சுவாமிநாதன், மனோகர், ஜீவா என வெள்ளித்திரைக்கு வந்தார்கள். இன்றும் பலருக்கு லொள்ளு சபா நிகழ்ச்சி பெரிய நம்பிக்கை தரக்கூடிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

படத்தின் நடிகர்களை ரோஸ்ட் செய்தபோது சம்பந்தப்பட்ட ஹீரோக்களை எரிச்சலடையவும் செய்தது. விஜய்யின் படத்தை ட்ரோல் செய்தபோது எஸ் ஏ சந்திரசேகர் இல்லாத ரகளை செய்யும் நிலைக்கே சென்றார்.
நேரில் அழைத்து மன்னிப்பு கேட்கும்படி செய்ததெல்லாம் அப்போதை காலத்தில் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் ராம்பாலா அளித்த பேட்டியொன்றில் ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜயகாந்தையும் கிண்டல்
ஒருமுறை வேறொரு நிகழ்ச்சியில் அனைத்து நடிகர்களையும் கிண்டல் செய்யும்படியான விஷயங்களை வைத்திருக்கிறார் ராம்பாலா. அந்நிகழ்ச்சியிலும் லொள்ளு சபாவில் பணியாற்றியவர்கள் தான் பெரும்பாலும் பணியாற்றினார்கள். விஜயகாந்தையும் கிண்டல் செய்தபோது வழக்கம்போல் ஒருதரப்பினர் அவரிடம் பற்ற வைத்திருக்கிறார்கள்.

உடனே விஜயகாந்திடம் இருந்து அழைப்பு வர, ராம்பாலா உள்ளிட்டோர் சென்றபோது விஜயகாந்த் ஃபைட் ரிகர்சலில் இருந்துள்ளார். அதே மூடோடு வந்து நம்மையும் தாக்கப்போகிறார் என்று திக் திக்கென இருந்துள்ளனர்.
கூலாக வந்த அவரோ, எல்லா நடிகர்களையும் கிண்டல் செய்றீங்களாமே என்று கேட்க, இல்லை சார், பேலன்ஸாகத்தன் செய்கிறோம். பதிலுக்கு ஹீரோக்களும் கிண்டலடிக்கும்படி ஸ்க்ரிப்ட் இருக்கும் என்றார்களாம். அதற்கு கேப்டன், நான் இன்னும் பார்க்கவில்லை, பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று அனுப்பி வைத்திருக்கிறாராம். அதற்குப்பின் ஒருவழியாக அந்த விவகாரம் முடிந்தது என்று ராம்பாலா பகிர்ந்துள்ளார்.