ஒரு காலை இழந்த லொள்ளு சபா உதயா!! நேரில் சந்தித்த விஜய் டிவி தங்கதுரை..
சிரிக்கோ உதயா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று லொள்ளு சபா. ந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் சிரிக்கோ உதயா. இவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக இடதுகால் எடுக்கும் நிலை வந்துள்ளது.
தற்போது ஓமந்தூர் மருத்துவமனையில் சர்க்கரை வியாதியால் பாதித்து காலை இழந்த சிரிக்கோ உதயாவை பிரபலங்கள் பலரும் பார்த்து உதவி செய்து வருகிறார்கள். முத்துக்காளை, கிங்காங், டிஎஸ்கே உள்ளிட்டவர்கள் பார்த்து உதவினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆக வீட்டில் இருக்கும் சிரிக்கோ உதயாவை விஜய் டிவி பிரபல தங்கதுரை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.
தங்கதுரை
ஒருகால் இல்லாமல், ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைக்க நடித்து வந்த ஒரு நடிகரை பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது, லொள்ளுசபா மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் அண்ணன் உதயா அவர்கள் சர்க்கரை வியாதியால் ஒரு கால் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார்.
இன்று அவரது வீட்டில் அவரை சந்தித்து நலம் விசாரித்து முடிந்த உதவியை செய்தேன். மேலும் உதவி செய்ய விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கு 7010734646 Gpay என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் தங்கதுரை.
