ஒரு வாரம் வீட்டை விட்டே வெளியே வரல.. விஷாலை திருமணம் செய்ய போகும் தன்ஷிகாவுக்கு என்னாச்சு

T Rajendar Dhansika
By Parthiban.A Feb 06, 2026 09:29 AM GMT
Report

நடிகை தன்ஷிகா தமிழில் பேராண்மை, மாஞ்சா வேலு, பரதேசி, கபாலி என பல குறிப்பிடத்தக்கது படங்களில் நடித்து இருக்கிறார்.

36 வயதாகும் தன்ஷிகா விரைவில் நடிகர் விஷாலை திருமணம் செய்ய இருக்கிறார். அவர்கள் நிச்சயர்தம் கடந்த வருடமே நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தன்ஷிகா தான் பட்ட அவமானம் பற்றி லேட்டஸ்ட் பேட்டியில் பேசி இருக்கிறார்.

ஒரு வாரம் வீட்டை விட்டே வெளியே வரல.. விஷாலை திருமணம் செய்ய போகும் தன்ஷிகாவுக்கு என்னாச்சு | Sai Dhanshika About T Rajendar Controversy

டி.ஆர் பேச்சால் வந்த மன அழுத்தம்

விழித்திரு என்ற படத்தின் விழாவில் பேசும்போது தன்ஷிகா அந்த நிகழ்ச்சி மேடையில் இருந்த டி.ராஜேந்தர் பெயரை சொல்ல மறந்துவிட்டார். அதற்கு பின் பேசிய டி.ஆர் தன்ஷிகாவை கண்டபடி விமர்சித்தார். ரஜினி உடன் நடித்தால் இந்த டிஆர் பெயர் எல்லாம் தெரியாதா, மேடை நாகரிகமே தெரியவில்லையே, பெரிய படத்தில் நடித்தால் நீ பெரிய நடிகையா என்றெல்லாம் தாக்கி பேசியார் டி.ஆர்.

அதனால் மேடையிலேயே தன்ஷிகா கண்ணீர் விட்டு அழுதார். அந்த நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் தன்ஷிகா பேசி இருக்கிறார். 'அவர் அப்படி பேசியது ரொம்ப கஷ்டமாக இருந்தது. மன அழுத்தத்தால் ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பப்லிசிட்டிகாக அப்படி செய்ததாக பலரும் சொன்னார்கள். ஆனால் அப்படி இருந்தால் நான் ஏன் ஒரு வாரம் அப்படி இருந்திருக்க போகிறேன்' என தன்ஷிகா பேசி இருக்கிறார்.