என் அப்பா இறப்பிற்கு நான் தான் காரணம்.. பிக் பாஸ் லாஸ்லியா வருத்தம்
லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் லாஸ்லியா, இலங்கை தமிழரான இவர் அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்து வந்துள்ளார்.
பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு பெறுகியது. அந்த ஷோவில் கவின் உடன் காதலில் இருந்தார். ஆனால் ஷோ முடிந்து வெளியில் வந்த பின் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும்போது அவரது அப்பா இறந்து விட்டார். அப்போது லாஸ்லியாவை பலரும் விமர்சித்தனர். தற்போது ஜென்டில்வுமன் என்ற படத்தில் லாஸ்லியா நடித்து இருக்கிறார்.
லாஸ்லியா வருத்தம்
இந்நிலையில், அதன் ப்ரோமோஷன் பேட்டியில் லாஸ்லியா தன் அப்பா குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில், " என் அப்பா இறப்பிற்கு நான் தான் காரணம் என்று கூறினார்கள். அதை பார்க்கும்போது மிகவும் கடினமாக இருந்தது சமூக வலைதளத்தில் கூறும் வார்த்தைகள் எதுவும் என்னை பாதிக்க போவதில்லை. இன்று வரை நான் என் அப்பா போன்னுக்கு கால் செய்வேன்" என்று கூறியுள்ளார்.