அப்பாவை கடைசியாக அங்கு தான் பார்த்தேன்.. பிக் பாஸ் லாஸ்லியா எமோஷனல்
லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் லாஸ்லியா, இலங்கை தமிழரான இவர் அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்து வந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் பெறுகியது. அந்நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது, உடல் எடையை குறைப்பது என ஆளே மாறிவிட்டார்.
தற்போது, அருண் இயக்கத்தில் நடிகர் ஹரி பாஸ்கருடன் இணைந்து மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் லாஸ்லியா.
லாஸ்லியா எமோஷனல்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது தந்தை மரணம் குறித்து லாஸ்லியா பேசிய விஷயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " என் அப்பா கண்டிப்பானவர் கிடையாது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் அவருக்கு அந்த நேரத்தில் என்னவென்று தெரியாது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செல்வதாக என் அப்பா நினைத்து கொண்டார்.
பின் நான் அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து புரியவைத்தேன். அப்பா கன்னடாவில் இருந்து வந்த பின் பிக் பாஸ் ஷோக்கு போன் செய்து, என்னை பார்க்க வேண்டும், வெளியில் அனுப்ப சொல்லி கேட்டுள்ளார். ஆனால், அது நடக்காத நிலையில் அவர் நிகழ்ச்சிக்கு வந்தார்.
நான் கடைசியாக அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பார்த்தேன். அதன் பின், அவரை உயிரோடு பார்க்கவில்லை" என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.