வாய்ப்பில்லாமல் இப்படி விளம்பரத்துக்கு தாவிட்டாங்களே.. பிக்பாஸ் நடிகை லாஸ்லியா முடிவு

Bigg Boss Losliya Mariyanesan
By Edward Oct 12, 2022 05:30 PM GMT
Report

இலங்கை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் லாஸ்லியா. நடிக்க வந்த இவர் பிக்பாஸ் 3 சீசனின் ஆடிஷனில் கலந்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.

லாஸ்லியா, கவினுடன் காதல்

க்யூட்டான தமிழ் பேச்சால் ரசிகர்களை ஈர்த்து வந்த லாஸ்லியா, கவினுடன் காதலில் விழுந்து சர்ச்சையில் சிக்கினார். காதல் குறித்து குடும்பத்தினரின் வெறுப்பை சம்பாதித்த பிறகு கவினிடம் இருந்து விலகி வந்தார். இருவரும் நிகழ்ச்சிக்கு பிறகு சந்திப்பதையும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டனர். தந்தை மறைவிற்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து ஒருசில படங்களும் வெளியானது. ஆனால் அவரின் நடிப்பு எதிர்ப்பார்த்த படி இல்லாமல் இருந்ததால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

வாய்ப்பில்லாமல் இப்படி விளம்பரத்துக்கு தாவிட்டாங்களே.. பிக்பாஸ் நடிகை லாஸ்லியா முடிவு | Losliya Latest Advertisement Video No Chance Movie

விளம்பரப்படங்கள்

வாய்ப்பிற்காக உடல் எடையை குறைக்க கடின உடற்பயிற்சியும் செய்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வரும் லாஸ்லியா கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். இந்நிலையில் படவாய்ப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அப்படி ஹெட்போன்ஸ், மளிகை கடை என விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா.