சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் இலங்கை நடிகை லாஸ்லியா! ஜிம் ஒர்க்கவுட் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி, சென்னைக்கு வந்தவர் தான் லாஸ்லியா. தோழியுடன் வாய்ப்பு தேடி வந்த லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் கவினுடன் காதலில் இருந்து, பெற்றோர்களால் கண்டிக்கப்பட்டார். அதன்பின் கவின் சவகாசமே வேண்டாம் என்று அவர் பக்கமே செல்லாமல் இருந்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிப்பின் சில படங்களில் நடித்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தார். அதிலிருந்து சில காலம் கழித்து மீண்டு வந்த லாஸ்லியா நடிப்பில் இரு படங்கள் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது.
பின் உடல் எடையை படுமோசமாக குறைத்து ஒல்லியாகினார். அதோடு கிளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்தும் வந்தார். தற்போது தீவிர ஒர்க்கவுட் செய்த புகைப்படத்தை பகிர்ந்து மிரள வைத்துள்ளார் லாஸ்லியா.

